×

கார்த்திகை மகா தீபம் இன்று இரவுடன் நிறைவு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையில் காட்சி தரும்

திருவண்ணாமலை, டிச.9: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது காட்சி தரும் கார்த்திகை மகா தீபம் இன்று இரவுடன் நிறைவடைகிறது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடந்து முடிந்தது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 29ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழாவை முன்னிட்டு மலையில் ஏற்றப்படும் மகா தீபம், ெதாடர்ந்து 11 நாட்கள் காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, தினமும் சிறப்பு பூஜைகளுடன் நெய், திரி ஆகியவை அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு திருப்பணியாளர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.தீபம் ஏற்றும் முறைதாரர்கள் மலையில் முகாமிட்டு, கடந்த 29ம் தேதி முதல் தீபம் ஏற்றி வருகின்றனர். தொடர் மழையிலும், மலை மீது மகா தீபம் தொடர்ந்து காட்சியளித்து வருகிறது. அதன்படி, 10வது நாளாக நேற்று இரவு மகா தீபம் காட்சியளித்தது.இந்நிலையில், 11வது நாளான இன்று இரவுடன் மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, நாளை காலை மலையில் இருந்து மகாதீப கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

Tags : Karthika Maha Deepam ,mountain ,Thiruvannamalai ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...