×

வேலூர் மாவட்டத்தில் மழையால் 9 வீடுகள் சேதம் குடியாத்தத்தில் அதிகபட்சமாக 41 மி.மீ மழை

வேலூர், டிச. 9: வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.  நிவர் புயலால் வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் பாலாறு, பொன்னை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், புரெவி புயலால் கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினமும் வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், வேலூர் மாவட்டம் முழுவதும் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை சேதம் குறித்து வருவாய் துறையினர் கணக்கீடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீட்டரில்: குடியாத்தம் 41, காட்பாடி 33.6, மேல் ஆலத்தூர் 35, பொன்னை 10.6, வேலூர் 11.7, வேலூர் சர்க்கரை ஆலை 32.2. மாவட்டத்தில் பதிவான மொத்த மழையளவு 164.1 மி.மீட்டராகும். சராசரியாக 27.35 மி.மீட்டர் பதிவானது.

Tags : houses ,rainfall ,Vellore district ,Gudiyatham ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...