×

ரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.51.23 லட்சம் வசூல்

திருச்சி, டிச.9: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதம் தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறந்்து எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.51,23,104 ரொக்கம், 211 கிராம் தங்கம், 640 கிராம் வெள்ளி, சிங்கப்பூர் உள்ளிட்ட 31 வெளிநாட்டு பணமும் இருந்தது.  உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aurangam ,temple bill opening ,
× RELATED ஆனிவார ஆஸ்தான வரவு, செலவு கணக்குகள்...