வைத்திலிங்கத்திடம் வாழ்த்து சுவர் இடிந்து விழுந்து பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்து கே.என்.நேரு ஆறுதல்

மணப்பாறை, டிச.9: மணப்பாறை அருகே கொட்டப்பட்டியில் சுவர் இடிந்து விழுந்து பலியானவரின் குடும்பத்தினரை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மணப்பாறை அருகே தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் அதன் அருகில் உள்ள வீட்டின் மீது இடிந்து விழுந்ததில் பழனியப்பன் மகன் செல்வகுமார்(45) என்ற கூலித் தொழிலாளி பலியானார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று கொட்டப்பட்டி வந்தார். உயிரிழந்த செல்வகுமாரின் மனைவி ராசாத்தி மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, பண உதவியும் வழங்கினார். கே.என்.நேருவுடன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி, நகர செயலாளர் கீதா மைக்கேல்ராஜ், ஒன்றிய துணை பெருந்தலைவர் புவனேஷ்வரி ஆண்டாள் மணி, மாவட்ட பிரதிநிதி பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் சந்திரகுமார், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், செல்வராஜ் மற்றும் காமராஜ், ஊராட்சி தலைவர்கள் சித்தாநத்தம் ரவிச்சந்திரன் மொண்டிப்பட்டி கலைச்செல்வி நாகராஜன், மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகி சீனிவாசன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.

Related Stories:

>