×

துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.35.36 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

துறையூர், டிச.9: துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏல விற்பனையில் ரூ.35.36 லட்சம் மதிப்பிலான பருத்திகள் விற்பனை செய்யப்பட்டது. துறையூர் வட்டாரத்தில் கோட்டாத்தூர், சிக்கத்தம்பூர், மண்பறை, வாலீஸ்புரம், அம்மாப்பட்டி, து.களத்தூர், கீழக்குன்னுப்பட்டி, திருத்தலையூர், கொல்லப்பட்டி, நடுவலூர், நாகலாபுரம், அம்மாப்பட்டி, அம்மம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 247 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை மூட்டைகளில் கட்டி துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலத்தில் விற்பதற்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று பருத்தி ஏலத்தில் விற்கப்பட்டது. இதில் கும்பகோணம், விழுப்புரம், பண்ருட்டி, நாமக்கல், கொங்கனாபுரம், பேட்டைவாய்த்தலை, செம்பனார்கோவில், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 பருத்தி வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு குவிண்டால் பருத்தியை அதிகபட்சமாக ரூ.6,032க்கு ஏலம் கேட்டனர். இதனையடுத்து 620.34 குவிண்டால் பருத்தி ரூ.35,36,580க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக் குழு செயலாளர் சுகுமார், விளம்பரம் மற்றும் பிரசார கண்காணிப்பாளர் யாஸ்மின், மேற்பார்வையாளர்கள் சுதா, சதீஷ், கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் முன்னின்று ஏலத்தை சுமூகமாக நடத்தினர்.

Tags : Cotton ,Thuraiyur Regulated Market ,
× RELATED சீனாவுக்கு பருத்தி ஏற்றுமதியால் கடன்...