×

தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் மணப்பாறையில் விழும் நிலையில் ஆபத்து மின்கம்பம்

மணப்பாறை, டிச.9: மணப்பாறை நகராட்சி 16வது வார்டு சேதுரத்தினபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில், காரை பெயர்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இதை மாற்ற வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகளுக்கு, இந்த வார்டு மக்கள் கோரிக்கை வைத்த போதிலும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த மின்கம்பம் விழுந்தால் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து இந்த வார்டு மக்கள் கூறுகையில், மின்வாரியத்தினரிடம் பலமுறை இந்த மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. உயிர்ப்பலி ஏற்படும் முன்னர் மின்வாரியத்தினர் இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அச்சத்துடன் கூறினர்.

Tags : Head Teachers Association ,Manapparai ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; அரையாண்டு...