×

அரசு வேலை என கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

மதுரை, ஆக. 18: மதுரையில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை, செல்லூர் பகத்சிங்நகர் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் பாரதி(33). இவரை பீபீகுளம் பாரதியார் முதல் தெருவை சேர்ந்த ஜாகீர்உசேன்(51) என்பவர் அணுகினார். தனக்கு பல்வேறு உயர் அதிகாரிகளை தெரியும் எனபதால், பாரதிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் கடந்த 2018ல் அரசு வேலைக்காக ஜாகீர்உசேனிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் கூறியதுபோல் அரசு வேலை வாங்கித்தரவில்லை என்பதுடன், கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த மோசடி குறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவில் பாரதி புகார் செய்தார். அதன் பேரில் பாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Madurai, Aga ,Madura ,Bharathi ,Bhagatsingnagar MGR Street, Chellore, Madurai ,Bibikulam Bharatiar First Street, Jagirusen ,
× RELATED ஓய்வூதியர் தின விழா