பழநி, ஆக. 18: தமிழ்நாடு முதல்வருக்கு ஓவியர் சங்கத்தினர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மண் வளத்தை பாதிக்கும் பிளக்ஸ் போர்டுகளை தடை செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் பிளக்ஸ் போர்டுகளுக்கு பதிலாக பெயிண்டால் ஆன விளம்பர பலகைகளை பயன்படுத்த வேண்டும்.
அனைத்து ஓவியர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஓவியர்களுக்கு விரைவில் வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பள்ளிகளில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓவிய ஆசிரியர்களின் தொகுப்பூதிய தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
