×

விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருத்துறைப்பூண்டி, ஆக.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார்.

ஆசிரியர்கள் பாஸ்கரன், எழிலரசி, கருணாமூர்த்தி, அஜிதா ராணி, முத்துராமன் முன்னிலை வகித்தனர் ஆசிரியை ஆடின் மெடோனா வரவேற்றார். பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார். ஆசிரியை வெற்றிசெல்வி நன்றி கூறினார். ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, அன்புமணி, மணிகண்டன், அஜிதா கனி, சொர்ணா, நிலோபர், அருண்நிதி கலந்து கொண்டனர்.

 

Tags : Thiruthuraipoondi ,Thiruthuraipoondi Government Boys' Higher Secondary School ,Thiruvarur ,Headmaster ,Balamurugan ,Bhaskaran ,Ezhilarasi ,Karunamoorthy ,
× RELATED ஓய்வூதியர் தின விழா