×

பாபநாசம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

தஞ்சாவூர், ஆக.18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி நல்லூர் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பாபநாசம் கலைக்கோவில் இசை பள்ளியை சேர்ந்த மாணவிகள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து நல்லூர் வேதபாடசாலையில் இருந்து கோகுலாஷ்டமி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கோலாட்டம், உறியடி உற்சவம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் ஆதி கேசவ பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

Thanjavur_180825_2

Tags : Gokulashtami festival ,Adikesava Perumal temple ,Papanasam ,Thanjavur ,Nallur ,Thanjavur district ,Nallur school ,Papanasam Kalaikovil Music School ,Radha ,Krishna… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா