×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

புதுக்கோட்டை, ஆக.18: புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நாளை நடைபெற உள்ளன என கலெக்டர் அருணா தெரிவித்தார். இதுகுறித்து, கலெக்டர் செய்திக்குறிப்பு விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதில், மாநகராட்சி, 18-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தொண்டைமான் நகர் சமுதாயக் கூடத்திலும்;

அரிமளம்-4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு பிலியவயல் ஊராட்சி, வம்பரம்பட்டி சமுதாயக் கூடத்திலும்; அறந்தாங்கி – 6 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வசந்தம் திருமண மண்டபத்திலும்; விராலிமலை – 9 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு இலுப்பூர் தாலுகா, மருதம்பட்டி கிராம சேவை மையக் கட்டிடத்திலும்;

பொன்னமராவதி – 5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு ஒலியமங்கலம் – வேங்கம்பட்டி மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திலும்; ஆவுடையார்கோவில் – 6 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு திருப்புனவாசல் உமையாள் திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது என கலெக்டர் அருணா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Stalin ,Pudukkottai district ,Pudukkottai ,Collector ,Aruna ,
× RELATED ஓய்வூதியர் தின விழா