×

4 மாதமாக பதுங்கியிருந்தவர் கைது விவசாயிகள் நெற்பயிர்களுக்கு தாவர பூச்சிகொல்லி மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்

நீடாமங்கலம். டிச.9: கொரடாச்சேரி வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நெற் பயிரினை நோய்த் தாக்குதலில் இருந்து சுற்றுப்புற சூழலை பாதுகாத்திடவும் பூச்சி கட்டுப்பாட்டிற்கு தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்.பூச்சிகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க பெரும்பாலும் ரசாயன மருந்துகளே வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரசாயக மருந்துகளை தேவைக்கு அதிகமாக, பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளின் எதிர்ப்பு தன்மை உருவாகுவதோடு நன்மை செய்யும் பூச்சிகளையும் அழித்து விடுகின்றன.மேலும் மண்வளம் பாதிக்கப்படுவதோடு உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் பூச்சிகொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சு தங்கி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமை விளைவிக்கின்றன. எனவே விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

வேம்பு தாவர பூச்சிக்கொல்லிகளில் மிக முக்கிய முதன்மையான இடத்தை பெற்றுள்ளது.வேம்பின் இலைகள், விதை, எண்ணை மற்றும் புண்ணாக்கு அனைத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பண்பை கொண்டவை. வேம்பானது பூச்சிகளை விரட்டியடித்து அவைகள் பயிரை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாகவும் விளங்குகிறது. பயிர்களின் மேல் பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்கும் பண்பை கொண்டவையாகும் . பூச்சிகள் பயிரை நெருங்க விடாமல் விரட்டியடிக்கும் தன்மை கொண்டவையாகும்.மேலும் பூச்சிகள் பயிரை உண்ணவிடாமல் செய்யும். அப்படியே உண்டாலும் பூச்சிகளுக்கு மாந்த நிலையை உண்டாக்கி அவைகளை பட்டினி கிடக்க செய்து இறக்க செய்து விடும்.வேப்பெண்ணைய் கரைசல் 3 சதவீதம் ,வேப்பம்பருப்பு சாறு கரைசல் 5 சதவீதம் , வேப்ப இலைச்சாறு கரைசல், வேப்பம் புண்ணாக்கு கரைசல் 10 சதவீதம் என்ற அளவுகளில் பயன்படுத்த வேண்டும்.

நெற் பயிரில் தோன்றும் இலைச்சுருட்டு புழு, ஆனைக்கொம்பன், புகையான் போன்ற பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து சோப்புநீர் போன்ற ஒட்டும் திரவம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். வேம்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுல் அசாடிராக்டின் மட்டுமே அதிக ஆற்றல் கொண்டது. நெற்பயிரில் இலைப்பேன், தண்டுத்துளைப்பான் , இலை மடக்கு புழு, புகையான் ஆகியவற்றை கட்டுப்படுத்த அசாடிராக்டின் 0.03 சதவீத கரைசலை ஒரு லிட்டர் நீருக்கு 5 மிலி வீதம் தேவையான அளவு மட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1.5 என்ற விகிதத்தில் கலந்து இட்டால் பயிருக்கு யூரியாவின் சத்து நீண்ட நாட்கள் கிடைக்க உதவும். தழைச்சத்து வீணாவது குறையும். இவ்வாறு விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து தாவர பூச்சி கொல்லிகளை, பயன்படுத்தி இயற்கை முறையிலேயே பயிரினை பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். இதனால் சூற்றுச்சூழல் பாதுகாக்கப் படுவதோடு வீண் செலவுகளை குறைத்து வருவாயை நிலைப்படுத்தலாம் என்றார்.

Tags : ambush ,
× RELATED ஐக்கிய நாடுகள் சபை திடீர் அறிக்கை...