- நாமக்கல்
- தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம்
- நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப் பள்ளி
- நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி
- செல்வம் கல்லூரி
- சி.எம்.எஸ் கல்லூரி
- ஆர்.ஜி.ஆர் பள்ளி
- ஜெய்விகாஸ் மேல்நிலைப் பள்ளி
- பிஜிபி
- மெட்ரிகுலேஷன் பள்ளி…
நாமக்கல், ஆக.18:நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, செல்வம் கல்லூரி, சிஎம்எஸ் கல்லூரி, ஆர்ஜிஆர் பள்ளி, ஜெய்விகாஸ் மேல்நிலைப்பள்ளி, பிஜிபி. மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை மற்றும் மாலையில் என இரண்டு தேர்வாக நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 2,210 பேர் விண்ணப்பித்திருந்தனர். 1290 பேர் இந்த தேர்வினை எழுதினர். 920 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு கண்காணிப்பு பணியில் 9 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு பறக்கும் படை, 2 நடமாடும் குழுக்கள், 9 ஆய்வு அலுவலர்கள் ஈடுபட்டனர்.

