×

தபால் நிலையங்களில் இருந்து வெளிநாட்டு தபால்களை அனுப்புவதற்கு வசதி

பட்டுக்கோட்டை, டிச. 9: பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தற்போதைய காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாக செல்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான ஆடைகள், மளிகை மற்றும் வீட்டு உபயோகத்துக்கான பொருட்களை அனுப்புவதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் தொழில் முனைவோர் பலர் தங்களுடைய உற்பத்தி பொருட்களின் மாதிரிகளை வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்புவதற்கும், மின் வணிகம் மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்புவதற்குமான தேவையும் அதிகரித்துள்ளது.

கொரோனா காலகட்டத்திலும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு மற்றும் வழிமுறைகளுக்கு இணங்க தற்போது 82 நாடுகளுக்கு வான்வழி பார்சல் மற்றும் பதிவு தபால்களும், 15 நாட்களுக்கு டிராக்டு பாக்கெட் சேவைகளும், 67 நாடுகளுக்கு பன்னாட்டு விரைவு சேவைகளும் அனுப்பும் வசதி பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களில் உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Facility ,post offices ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை