புதுகை கலெக்டர் தகவல் விவசாயிகள் போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு

இலுப்பூர், டிச.9: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிராக சட்டத்தை ரத்து செய்யகோரி நேற்று இலுப்பூரில் வழங்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இலுப்பூர் வழக்குறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிராக சட்டத்தை ரத்து செய்யகோரி நீதிமன்றத்தை நேற்று (8ம் தேதி) ஒருநாள் புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.

Related Stories:

More