×

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குன்னத்தில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் கடையடைப்பு

பெரம்பலூர், டிச.9: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பெரம்பலூர் குன்னத்தில் ஆர்ப்பாட்டம். கிருஷ்ணாபுரத்தில் கடை அடைப்பு நடந்தது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மின்சார சட்டம் 2020ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், பெரம்பலூர் 4 ரோடு மின் வாரிய மேற்பார்வைப் பொ றியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித் தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். சிஐடியூ கோட்டநிர்வாகிகள் செந்தில், பெஞ்சமின், வட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், ஹெச்எம்எஸ் வட்ட நிர்வாகி சுகுமாறன் உள்ளி ட்டப் பலர் கலந்து கொண் டனர்.

இதேபோல் குன்னம் பஸ் டாண்டு முன்பு, அனைத்து கட்சிகள், விவசாய, தொழி ற்சங்க கூட்டமைப்பினர் ந டத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ஆறுமுகம், விசிக ஒன்றிய செயலாளர்கள் நந்தன், கதிரவன், வரதராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி ஜெய்சங்கர், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சின்னபொண் ணு, சமூக செயற்பாட்டாளர் வெண்மணி வரதராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வேப்பந்தட்டை தாலுகா கிரு ஷ்ணாபுரத்தில் 250 கடைகள் அடைக்கப்பட்டு ஆத ரவு தெரிவிக்கப்பட்டிருந் தது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணி ந்து கடைகளில் பணிபுரிந்தனர்.

Tags : Demonstration ,struggle ,Kunnam ,Perambalur ,shop ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...