×

பெண் போலீசார் நடத்தினர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏர் கலப்பையுடன் மறியலில் ஈடுபட்ட 118 பேர் கைது

பெரம்பலூர், டிச.9: டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூ ரில் ஏர் கலப்பையுடன் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய, தொழிலாளர் சங்க கூட்டமைப்பை சேர்ந்த 118பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் மத்தியஅரசின் வேளாண் சட்ட மசோதாவி ற்கு எதிராக ஒருவாரத்தி ற்கு மேலாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரம் பலூரில் அனைத்து கட்சிகள், விவசாய, தொழிற் சங்கக் கூட்டமைப்பை சேர்ந் தவர்கள் ஒன்றிணைந்து புதுபஸ்டாண்டு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை தலைமை வகித்தார்.

திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நகர செயலாளர் பிரபாகரன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விசிக மண்டல செயலாளர் கிட்டு, மதிமுக மாநில நிர்வாகி துரைராஜ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முகமது ரபிக், எஸ்டிபிஐ அபுபக் கர் சித்திக், முஸ்லிம் லீக் சர்புதீன், ஐஜேகே கட்சி மாவட்ட தலைவர் ரகுபதி, மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சக்திவேல், சிஐடியூ மாவட்டத் தலைவர் அகஸ்டின், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கலையரசி, ஆட்டோ சங்க நிர்வாகி சண்முகம், பொது தொழிலாளர் சங்க நிர்வாகி ரங்கநாதன் உள்ளிட்டப் பலரும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் நான்கைந்து விவசாயிகள் கோவனத்துடனும், ஏர் கலப்பை சுமந்தபடியும் கலந்து கொண்டனர். மோடியின் முகமூடி அணிந்த ஒருவர் விவசாயியின் கோமணத் தை உருவுகிற காட்சியும் விவசாயிகள் ஒன்று சேர் ந்து மோடியைத் தாக்கமுற் படும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. பின்னர் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட 15 பெண்கள் உள்பட 118 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags : rally ,protesters ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி