×

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் முழு கடையடைப்பு, மறியல் போராட்டம்: 177 ேபர் கைது

கரூர், டிச. 9: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடத்தப்பட்ட பந்த்தில் கரூர் நகரைப் பொறுத்தவரை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பந்த்தின் காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்தன. கரூர் நகரைப் பொறுத்தவரை 90 சதவீத கடைகள் திறந்தே இருந்தன. மேலும், க.பரமத்தி, தோகைமலை போன்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன. மேலும் மைய நகரமான கரூரில் இருந்து வழக்கம் போலவே அனைத்து பேருந்துகளும், ஆட்டோ, கார்கள் போன்றவை இயக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. கரூர் நகரப்பகுதிகளில் ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தன.

மறியல் செய்த 177 பேர் கைது: மேலும் இதையொட்டி சிபிஐ(எம்), விவசாய அமைப்புகள் உட்பட பல்வேறு சார்பு அமைப்புகள் சார்பில் நேற்று கரூர், குளித்தலை, தோகைமலை, மாயனூர் ஆகிய நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் அந்தந்த காவல் நிலைய போலீசார் மறியல் போராட்டம் நடத்திய 177 பேரை கைது செய்தனர். கரூர் தபால் தந்தி அலுவலகம் அருகே சிபிஐ(எம்) மற்றும் அகில இந்திய விவசாயிகள் பேராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கரூர் கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை டவுன் போலீசார் கைது வேனில் ஏற்றிச் சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம்: கரூர் கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Bharat Bandh ,strike ,Delhi ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து