×

அருப்புக்கோட்டை அருகே தலைகீழாக கவிழ்ந்த சுற்றுலா வேன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் காயம்

அருப்புக்கோட்டை, டிச. 9:  திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மாரப்பன், தனது குடும்பத்தினர் 12 பேருடன் ஆன்மீக சுற்றுலாவுக்காக டெம்போ வேனில் நேற்று புறப்பட்டு வந்தனர். துரைசாமி என்பவர் வேனை ஓட்டி வந்தார். நேற்று காலை பிள்ளையார்பட்டியில் தரிசனம் முடிந்து, திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அருப்புக்கோட்டை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் கட்டங்குடி விலக்கில், வேன் திடீரென நிலை தடுமாறி சாலையின் மையத்தடுப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த மணிமேகலை (45), நர்மதா (21), ரேவதி (36), சண்மிகா (12), சங்கீதா (49), லெட்சுமி (55), மாரப்பன் (60) உட்பட 7 பேர் காயமடைந்தனர். அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், நான்குவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,district ,Tirupur ,Aruppukkottai ,tourist van ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...