×

திண்டுக்கல், மதுரை, சென்னையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல், மதுரை, சென்னையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.30 மணிக்கு 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் கார்களில் வந்து சோதனை நடத்திவருகின்றனர். 8 சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொடர்ந்து அதே பகுதியில் இருக்க கூடிய வள்ளலார் நகர் என்ற பகுதியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறனர். அங்கு 10 சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினராக இருக்ககூடிய திண்டுகல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் வீட்டிலும் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 9மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது.

Tags : Enforcement Department ,Tamil Nadu ,Rural Development ,Minister ,I. Periyasamy ,Dindigul ,Madurai ,Chennai ,4 Enforcement Department ,Ashok Nagar, Dindigul ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!