×

டிரான்ஸ்பார்மரில் படரும் கொடிகள்

கீழக்கரை, டிச.9: கீழக்கரையில் மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் படரும் கொடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கீழக்கரை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் நீண்ட காலமாக மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை சுற்றி புதர்கள், செடிகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. தேவையற்ற கொடிகள், மின்கம்பங்களிலும் தாங்கி பிடிக்கும் ‘ஸ்டே’ கம்பிகளிலும் பற்றிப் படர்ந்து, உயரத்தில் தொங்கியபடி வளர்கின்றன. கீழக்கரை, கடற்கரை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது. ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ஏற்பட்டால், சீரமைப்பு பணி மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மீது கொடிகள் படர்வது ஆபத்தாக உள்ளது. உடனே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...