கடலாடி யூனியன் சார்பில் கொசு மருந்து தெளிப்பான் வழங்கல்

சாயல்குடி. டிச. 9: கடலாடி யூனியன் சார்பில் பஞ்சாயத்துகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் நேற்று வழங்கப்பட்டது. மழைக்காலம் என்பதால் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பஞ்சாயத்துகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேட்டரி ஜார்ச் மற்றும் கைகளால் இயக்கும் வகையில் உள்ள மருந்து தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலாடி யூனியனில் நடந்த நிகழ்ச்சிக்கு சேர்மன் முத்துலெட்சுமிமுனியசாமிபாண்டியன் தலைமை வகித்தார். ஆணையாளர் அன்புக்கண்ணன், வட்டாரவளர்ச்சி அலுவலர் பாண்டி முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவணுபூவன் வரவேற்றார். 60 பஞ்சாயத்துகளுக்கு வழங்கும் துவக்க நிகழ்ச்சியில் முதல் தெளிப்பானை கடலாடி பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கம்லிங்கம், ஊராட்சி செயலர் முனீஸ்வரன் பெற்றுக்கொண்டனர். இதனை போன்று ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி முகமை சார்பில் நூறு நாள் வேலை நடக்கக்கூடிய இடத்தில் வைக்கக் கூடிய முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது. இதில் இத்திட்ட உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: