×

கொழும்புவில் இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி: இந்தியாவின் அதிநவீன கப்பல்கள் பங்கேற்பு

இலங்கை: கொழும்புவில் இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியுள்ளது. இந்திய இலங்கை கடற்படைகள் ஆண்டு தோறும் கூட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் இவ்விரு நாடுகளின் கடற்படைகளின் 10 வது கூட்டுப் போர் பயிற்சி கொழும்புவில் 3ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டுப் போர் பயிற்சி இரு கட்டங்களாக நடக்கிறது.

முதல் கட்டமாக 5ம் தேதி வரையில் துறைமுக அளவிலான கூட்டுப் போர் பயிற்சி கொழும்புவில் நடக்கிறது. 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் கடல் அளவிலான கூட்டுப் போர் பயிற்சியும் கொழும்புவில் நடக்கிறது. இந்திய இலங்கை கப்பல்கள் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் இந்தியாவில் இருந்து அதிநவீன நீர்முழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கில்தான், ரோந்து கப்பலான ஐ.என்.எஸ் சாவித்திரி இந்திய கடற்படையின் சேட்டக் ஹெலிகாப்டர், டார்னியர் கடல் சார்பு ரோந்து விமானம் ஆகியவை பங்கேற்றுள்ளன.

The post கொழும்புவில் இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி: இந்தியாவின் அதிநவீன கப்பல்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Colombo ,India ,Sri Lanka ,
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்