மேலூர், டிச. 9: புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மேலூர் பஸ்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், பார்வர்ட பிளாக் கட்சியின் விவசாய பிரிவு உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஊர்வலமாக சென்று மேலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதை டிஎஸ்பி ரகுபதிராஜா தடுக்க முயல, திடீரென சாலை மறியலில் போராட்டக்காரர்கள் ஈடுபட, அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலூரில் உள்ள 90 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.