இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

உசிலம்பட்டி, டிச. 9:  இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் பெண்கள் மனுக்களுடன் வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மிகவும் வறுமை கோட்டிற்கு கீழே வசித்து வருகிறோம். இது நாள்வரை எங்களுக்கு சொந்த வீடுகள் கிடையாது. உறவினர்கள் வீடுகளில் வாடகை கொடுத்து வசித்து வருகிறோம், அதிக வருமானம் இல்லாத கூலித்தொழிலாளர்களாக இருப்பதால் எங்களால் சொந்த வீட்டுமனை வாங்கும் அளவிற்கு வருமானம் கிடையாது. இதனால், எங்கள் வறுமையின் சூழல் அறிந்து இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று மனுவுடன் கேட்டு வந்துள்ளோம் என்று கூறினார்கள். இது குறித்து ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் விடுதலை சேகரன் தலைமையில் ஆர்டிஓ ராஜ்குமாரிடம் மனு கொடுத்தனர். அதனை விசாரித்த ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார், அதன் பின்பு பெண்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>