×

மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் மரங்கள், வனத்தை அழிக்காமல் சிட்கோ தொழிற்பேட்டை ஐ.பெரியசாமி எம்எல்ஏ உறுதி

குஜிலியம்பாறை, டிச 9 : ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ சுற்றுப்பயணத்தின் குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டியில் விவசாயிகள், பொதுமக்களை சந்திக்கும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திமுக மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்து, விவசாயிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘கலைஞர் ஆட்சி காலத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்களில் ரூ.800 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏழை மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று இந்தியாவில் சிந்தித்த ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான். கடந்த 50 வருடங்களுக்கு முன்பே வீடு இல்லாத ஆதிதிராவிட ஏழை மக்களுக்கு ஒரு லட்சம் வீடு கட்டி கொடுத்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன், குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை சீலக்கரட்டில் வனப்பகுதியை அழிக்காமல், சமநிலப்பரப்பில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றவுடன் நிறைவேற்றி தருவது என் கடமை என்றார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ., திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : I. Periyasamy MLA ,CIDCO ,MK Stalin ,
× RELATED வாக்கு எண்ணிக்கைக்கு 6 நாட்களே உள்ள...