ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி 2 பேர் கைது

பட்டிவீரன்பட்டி, டிச. 9: வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின்ரோட்டில் ஸ்டேட் வங்கி காலனியில் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. கடந்த வாரம் நள்ளிரவில் மர்மநபர்கள் முண்டாசு கட்டிய நிலையில் இந்த ஏடிஎம்மை  உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இதில் இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது உத்தமநாயக்கனூர் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (31), யோகேஷ் (19) என்பதும், இருவரும் கோழி வியாபாரம் செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

>