தருமத்துபட்டி, தாண்டிக்குடி சாலையில் மண்சரிவு

சின்னாளபட்டி, டிச. 9: ரெட்டியார்சத்திரம்  அருகே அமைதிச்சோலை  அருகே மேல்கன்னிமார் கோயில் பகுதியில் மழைக்கு திடீரென பாறைகள் விழுந்து  மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் சில பாறைகள் கீழே விழும் அபாயத்தில்  உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது பெரும் விபத்து  ஏற்படும் என்பதால் கலெக்டர் விஜயலெட்சுமி தருமத்துப்பட்டியில் இருந்து  பன்றிமலை, தாண்டிக்குடி செல்லும் பாதையில் போக்குவரத்துக்கு தடை  விதித்துள்ளார். மேலும் பன்றிமலை, ஆடலூர் கிராமமக்கள் கே.சி.பட்டி,  பாச்சலூர், ஒட்டன்சத்திரம் வழியாகவும், பன்றிமலை-ஆடலூர், கே.சி.பட்டி,  தடியன்குடிசை பெரும்பாறை வழியாகவும் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>