- சமயபுரம் அங்கன்வாடி
- சமயபுரம்
- அரசு அங்கன்வாடி மையம்
- சமயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- சுதந்திர தினம்
- சா. கண்ணனூர் அங்கன்வாடி
- ஆசிரியர்
- கீதா
- தலைமையாசிரியை
- சாந்தி
சமயபுரம், ஆக. 15: சமயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சா. கண்ணனூர் அங்கன்வாடி ஆசிரியை கீதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, கதைப்போட்டி நடத்தப்பட்டது.
அதன் பிறகு நடைபெற்ற மாறு வேடப்போட்டியில் குழந்தைகள் சுதந்திர தேவி, நேரு, காந்தி, நேதாஜி, ஜான்சிராணி போன்ற தலைவர்கரை போல வேடங்கள் அணிந்து வந்தனர். இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரிஸ்வந்த், சாரா ஸ்ரீ, திவ்ய பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் உதவியாளர் உமா நன்றி கூறினார்.
