×

முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி இரவு நேரத்தில் பேருந்து வசதி

முத்துப்பேட்டை, ஆக.15: முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டிஇரவு நேரத்தில் பேருந்து வசதி வேண்டும் எனெபாதுமக்கள் கோரிக்கை விடுத்திள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு செல்ல இரவு 10மணிக்கு பிறகு பேருந்து வசதி கிடையாது.

இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் திருத்துறைப்பூண்டிக்கும் அதனை தொடர்ந்து செல்லும் ஊர்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண்கள் பல்வேறு வகையில் பாதிப்படைகின்றனர். அதனால் இப்பகுதி மக்கள் நலன் கருதி முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டிக்கு இரவு 10மணிக்கு மேல் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Muthupettai ,Thiruthuraipoondi ,Thiruuthuraipoondi ,Thiruvarur district ,
× RELATED ஓய்வூதியர் தின விழா