திருவாரூர், ஆக.15: சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ளத்தையொட்டி ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள்,பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி ராஜன், டி.எஸ்.பி சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் சப் இன்ஸ்பெக்டர்கள் தண்டபாணி, ரவிசந்திரன், தனிபிரிவு எஸ்.எஸ்.ஐ சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் மோப்பநாய் முகில் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புதுவை மாநிலம் காரைக்கால் செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
