×

அரியலூர் மாவட்டத்தில் அரசு ஐடிஐ சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு

அரியலூர், ஆக.15: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை தேதி வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு : 2025 – ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். முன்பதிவு இருக்கைகள் நிரப்பப்பட்டதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,11, 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. விண்ணப்ப கட்டணத்தொகை: ரூ.50. ஒரு வருடம் தொழிற்பிரிவு சேர்கைக்கான பயிற்சி கட்டணம்-185 ரூபாய். மற்றும் இரண்டு வருட தொழிற்பிரிவு சேர்கைக்கான பயிற்சி கட்டணம் 195 ரூபாய்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் – 9499055877, 04329-2284082. அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம்- 9499055879, 9499055880 அரசு தொழிற் பயிற்சி நிலையம், தா.பழூர்-9499055879 ,9042920702 ஆகும்.இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Government ,ITI ,Ariyalur district ,Ariyalur ,District ,Collector Rathinasamy ,
× RELATED ஓய்வூதியர் தின விழா