×

பாலக்காடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நிறைவு

பாலக்காடு, டிச. 9: பாலக்காடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.  கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்ட பஞ்சாயத்திற்கும், 13 பிளாக் பஞ்சாயத்திற்கும், 88 கிராமப் பஞ்சாயத்திற்கும், 7 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
 இத்தேர்தலில் பாலக்காடு மாவட்டப் பஞ்சாயத்தில் 30 டிவிஷன்களில் 126 வேட்பாளர்களும், 13 பிளாக் பஞ்சாயத்துகளில் 183 டிவிஷன்களில் 636 வேட்பாளர்களும், 88 கிராமப் பஞ்சாயத்துகளில் ஆயிரத்து 490 வார்டுகளில் 5 ஆயிரத்து 16 வேட்பாளர்களும், 7 நகராட்சிகளில் 239 வார்டுகளில் 806 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். பாலக்காடு மாவட்டத்தில் 23 லட்சத்து 35 ஆயிரத்து 345 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் 11 லட்சத்து 20 ஆயிரத்து 163 ஆண்களும், 12 லட்சத்து 15 ஆயிரத்து 168 பெண்களும், 14 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 18 ஆயிரம் அரசு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 796 போலீசாரும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். 12 டி.எஸ்பி.க்கள், 60 சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், 60 எஸ்.ஐ.க்கள், 401 போலீசார், 4 ஆயிரத்து 139 போலீஸ் அதிகாரிகள், ஆயிரத்து 184 பேர் சிறப்புப்படையினர் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இன்று காலை 9 மணி முதல் பாலக்காடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க  வாக்காளர்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும். சானிட்டரி  உபயோகப் படுத்தவேண்டும். வாக்குச்சாவடி மையங்களுக்கு பேனா கொண்டு செல்லவேண்டும் என தேர்தல் ஆணையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : election campaign ,Palakkad ,district ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...