×
Saravana Stores

செனகல் நாட்டில் சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம்: 4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை கண்டு களித்த மக்கள்..!!

டக்கார்: செனகல் நாட்டில் சுதந்திர தினத்தையொட்டி 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை திரளான மக்கள் கண்டு களித்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சுதந்திர கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் – பாதுகாப்பு படையினர் இடையிலான மோதல் உள்ளிட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அங்கு சுதந்திர தின கொண்டாட்டம் அரங்கேறியது.

நீண்ட இடைவெளிக்கு பின் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். செனகல் அதிபர் மேக்கி சால் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ராணுவ வாகனங்கள் மற்றும் சீருடை அணிந்த வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை சாலையின் இரு புறங்களிலும் திரண்டு இருந்த மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

The post செனகல் நாட்டில் சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம்: 4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை கண்டு களித்த மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Senegal ,Dakar ,Dinakaran ,
× RELATED சாட் நாட்டில் ராணுவ தளம் மீது தாக்குதல் 40 வீரர்கள் பலி