தாக்கிய பெண் மீது நடவடிக்ைக கோரி பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் மறியல்

பெரம்பூர்: பெரம்பூரில் இருந்து நேற்று மாலை மாநகர பேருந்து (தடம் எண் 42) விநாயகபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் பாலாஜி (40) பேருந்தை ஓட்டினார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக சென்றபோது, மொபட்டில் வந்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்த மோனிகா (38) மற்றும் அவரது உறவினர் விஜயகுமாரி (40), பேருந்தை கடக்க முயன்றுள்ளனர். ஆனால், டிரைவர் வழிவிடாததால் ஆத்திரமடைந்த பெண்கள் பேருந்து வீனஸ் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு டிரைவர் திட்டியதால் பேருந்துக்குள் ஏறிய மோனிகா டிரைவர் பாலாஜியை அடித்தார். இதனால், அவ்வழியே சென்ற மாநகர பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செம்பியம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, 20 நிமிடம் கழித்து பேருந்துகள் இயக்கப்பட்டன் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories:

>