×

படகு கவிழ்ந்து 20 அகதிகள் பலி: இத்தாலியில் சோகம்

ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியையும், வட ஆப்ரிக்க நாடுகளையும் இணைக்கும் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க மக்கள் அகதிகளாக இத்தாலிக்கு ஆபத்தான படகுகளில் பயணிக்கின்றனர். இந்தாண்டில் நேற்று வரை 38,263 பேர் கரையை அடைந்துள்ளனர். மேலும், 675 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த 97 பயணியருடன் நேற்று ஒரு படகு இத்தாலிக்கு சட்டவிரோதமாக புறப்பட்டது. லேம் பெடுசா தீவு அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒன்றரை வயது குழந்தை உட்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Italy ,Rome ,Mediterranean ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...