திருச்சியில் திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு

திருச்சி, டிச.8: திருச்சியில் திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மத்திய, வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அடங்கிய குழுவினர் பங்கேற்று மனுக்களை பெற்றனர். இந்த கூட்டம் முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாய சங்கத்தினர், வியாபாரிகள், வணிகர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மோட்டார் வாகன, ஓட்டுனர் உரிமையாளர்கள், கட்டிட கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் கடைமடை வரை தண்ணீர் செல்ல உய்யகொண்டான் ஆற்றை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மேலும் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் 150க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்கள் அடங்கிய கடிதங்களை போட்டனர். இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்எல்ஏக்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>