மதுரை, ஆக. 14: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இப்போட்டியை உடற்கல்வி பிரிவு ஆய்வாளர் வினோத் துவக்கி வைத்தார்.
நீச்சல் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், இணைச்செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போட்டியானது 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நடந்தது. இதில் பட்டர்பிளை, ப்ரஸ்ட்டோக் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
