நீடாமங்கலம்,ஆக.14: கொரடாச்சேரி அருகே கணவன் மனைவி தகராறை தடுத்த மாமியாரை தாக்கிய மருமகன்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து குமரனை தேடிவருகின்றனர். கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவணிதம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன், இவரது மனைவி புவனேஸ்வரி 70. இவரது மருமகன் குமரன் 45. இவரது மகன் பிரகாஷ் 17. குமரனுக்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையினை தடுக்கச் சென்ற போது மாமியார் புவனேஸ்வரியையும் தனது மகன் பிரகாஷையும் குமரன் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த புவனேஸ்வரி, பிரகாஷ் ஆகிய இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
