திருவாரூர், ஆக.14: இந்திய மற்றும் அமெரிக்க வேளாண் வணிக ஒப்பந்தத்தை கண்டித்து திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்திய மற்றும் அமெரிக்க வேளாண் வணிக ஒப்பந்தத்தை கண்டித்தும், அதனை ரத்து செய்ய கோரியும், அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பினை கண்டித்தும் இதற்கு துணை போகும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்தும் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் மாசிலாமணி, தம்புசாமி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
