- அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம்
- அரியலூர்
- அரியலூர் மாவட்ட போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் ச
- அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் ஊராட்சி ம
- நிர்வாகிகள்
- ராஜாஜி
அரியலூர், ஆக.14: அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக் குழு மற்றும் 2025- 2028 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில், நடைபெற்றது. அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சங்கர் வருகை தந்த அனைவரையும் வரவேற்று,தொடர்ந்து ஆண்டு அறிக்கை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேதியிலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் செல்வன், மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் சொக்கலிங்கம், திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் பிரபாகரன், தஞ்சை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் சிவம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக, பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவராக கருணாகரன், மாவட்ட செயலாளராக கார்த்திகேயன், மாவட்ட பொருளாளராக சங்கர், மாநிலசெயற்குழு உறுப்பினராக முருகன் ( மொத்த மருந்து வணிகம்), மாநில செயற்குழு உறுப்பினராக அசோக்குமார் (சில்லறை மருந்து வணிகம்), மாநில அமைப்பு செயலாளராக ஜவஹர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர்களாக சேவியர் சஞ்சீவ் குமார், சுகுமார் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அரியலூர் மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனையாளர்கள், மருந்தாளுனர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
