×

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்பிஎப் மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் அப்பாசாமி, பழனிசாமி, சுப்பிரமணியன், வடிவேலன், பால்ராஜ், ஆனந்தராஜ், சுடர்வளவன், முருகவேல், ராஜசேகர், குணாளன் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.

சுதந்திர போரில் வெள்ளைக்காரனுக்கு வரிகொடா இயக்கம் நடத்திய நாட்டில், கொள்ளை வரி போட்ட டிரம்பை கண்டிக்க வாய் திறக்காத மோடி அரசை கண்டிப்பது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Tags : Karur ,United Farmers Front ,Head ,Post ,Office ,LPF District ,President ,Annavelu ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை