×

அமைச்சர்கள் காமராஜ், அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் ஊரடங்கில் இருந்து தளர்வு எதிரொலி கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் துவக்கம்

திருவாரூர், டிச. 8: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ந் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதேபோல் பள்ளி அளவில் 10 மற்றும் 11 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து நேற்றுமுதல் மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை துவங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து வகுப்புகள் துவங்கப்பட்டன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திருவிக அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி மற்றும் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் அரசு கல்லூரிகள் மற்றும் திருவாரூர், மஞ்சகுடி, கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள், நீடாமங்கலம் கோவில்வெண்ணி மற்றும் மன்னார்குடி எடையர் நத்தம் பகுதியில் இயங்கி வரும்தனியார் பொறியியல் கல்லூரிகள் என அனைத்திலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கி நடைபெற்றன. இதனையொட்டி திருவாரூர் திருவிக அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டதன் அந்த கட்டிடங்களில் தற்போது வரையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்படாத நிலையில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள் 283 பேர்களில் 217 பேர்களும் , முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் 28 பேர்களில் 14 பேர்களும் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Ministers ,Kamaraj ,classes ,opening ,Anpalagan ,colleges ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...