×

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சை, டிச. 8: ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வைத்திலிங்கம் கூறினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டத்தில் 10,000 ஹெக்டேர் பயிர்கள் மழையில் மூழ்கி தற்போது வடிந்து கொண்டிருக்கிறது. இன்சூரன்ஸ் தொகை, நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேல் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேளாண்மை திருத்த சட்டம் விவசாயிகளுக்கு மிக பயனாக உள்ளது. அதை முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழர்களின் பண்பாடு எந்த ஒரு திட்டத்தையும் வரவேற்பது. ரஜினி கட்சி தொடங்கினால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் கட்சி தொடங்கட்டும். பிறகு எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rajini ,Vaithilingam ,interview ,
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..