×

ஆறுமுகநேரியில் நிதி கல்வி அறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆறுமுகநேரி, ஆக. 14: ஆறுமுகநேரியில் நிதி கல்வி அறிவு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆறுமுகநேரியில் நிதி கல்வி அறிவு மூலம் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துதல் கிராமின் கூட்டா மற்றும் கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுன்டேஷன் தலைமையில் சமூக பொருளாதார வளர்ச்சி பணிமனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மகளிருக்கான கடன்களை பெறுவது எப்படி? கடன் ஒழுங்கு முறையை பின்பற்றுவது, டிஜிட்டல் மோசடியை தடுப்பது மற்றும் முழுமையான நிதி சுதந்திரத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திறன்களை உருவாக்குவதும் குறித்து அறிவுறுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக எஸ் ஐக்கள் ஆறுமுகநேரி சுந்தர்ராஜ், தூத்துக்குடி வீரப்பெருமாள், ஆறுமுகநேரி எழுத்தாளர் ஸ்டீபன், டாக்டர். னிவாசன், கே ஏ மேல்நிலைப்பள்ளி தலமை ஆசிரியர் கண்ணன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் நர்மதா கருத்துரை ஆற்றினர். இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்வில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பழனிக்குமார், பகுதி மேலாளர் பழனிக்குமார், கிளை மேலாளர் ஆபேல், கணேஷ்குமார், ஆயிஷா, முத்துச்செல்வி, கிளை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Arumuganeri ,Gramin Koota ,Credit Access India Foundation ,
× RELATED ஓய்வூதியர் தின விழா