- Muthumariyamman
- தேவகோட்டை
- தேவகோட்டை ஏ. த
- ஆடி உற்சாக விழா
- வினய் தீர்த்த முத்துமாரியம்மன் கோவில்
- மு தெரு
தேவகோட்டை, ஆக.14: தேவகோட்டை ஆ.த.மு தெருவில் அமைந்துள்ள வினை தீர்த்த முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவில் தினந்தோறும் சிறப்பு அலங்காரங்கள் செய்து, பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று கருதாவூரணி விநாயகர் கோிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, அக்னி சட்டி, எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
