உளுந்தூர்பேட்டை, ஆக. 14: உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நொனையவாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (39). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் இதே கிராமத்தில் வசிக்கும் 12ம் வகுப்பு மாணவியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததுடன், சம்பவத்தன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி எலக்ட்ரீசியன் சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
