×

கிரானைட் கற்கள் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரி மாணிக்கம் மற்றும் அலுவலர்கள், தர்மபுரி ஏ.செட்டிப்பள்ளி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல வண்ண கிரானைட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நேரத்தில், லாரி டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து 2 லாரிகளையும், கிரானைட் கற்களுடன், தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். பிடிபட்ட லாரி, கிரானைட் கற்களின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 60ஆயிரம் ஆகும்.

Tags : Dharmapuri ,Geological and Customs Officer ,Manickam ,A. Chettipalli ,
× RELATED ஓய்வூதியர் தின விழா