×

அனைத்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம், ஆக.14: குமாரபாளையம் நகர அனைத்து வணிகர் சங்க கூட்டம் நடந்தது. சங்கத்தின் புதிய தலைவராக ரெயின்போ காமராஜ், செயலாளராக விடியல் பிரகாஷ், பொருளாளராக செந்தில், துணை தலைவர்களாக சேகர், சம்பத், பாலமுருகன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உதவி செயலாளர்களாக சண்முகம், பிரபாகரன், பாலகிருஷ்ணன், மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குமாரபாளையத்தில் அனைத்து வணிகர் சங்க புதிய கிளையை துவக்குவதெனவும், கிளையின் துவக்கவிழாவிற்கு மாநில தலைவர் விக்கிரமராஜாவை அழைத்து பெயர் பலகையை திறந்து வைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. கோபிராவ் நன்றி கூறினார்.

Tags : All Traders Association ,Kumarapalayam ,Kumarapalayam City ,Rainbow Kamaraj ,Vidyal Prakash ,Senthil ,Sekar ,Sampath ,Balamurugan ,Gopalakrishnan ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா