அமைச்சர் வேலுமணி பேட்டி 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரி சென்ற மாணவ, மாணவிகள்

நாகை, டிச.8: நாகையில் 8 மாதங்களுக்குப் பின் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 8 மாதங்களாக தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் கல்லூரிக்குச் சென்று கல்வியை தொடர முடியாமல் மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் வகுப்பை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் கல்வி நலன்கருதி நேற்று முதல் மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் நாகை மாவட்டத்தில் 15 கலை மற்றும் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்டது. பின்னர் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை பிஏ தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.பி.ஏ ஆகிய பட்ட வகுப்புகளும்,எம்.ஏ தமிழ், எம்எஸ்சி கணிதம் ஆகிய முதுகலை பட்டப்படிப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் புத்தூர் அரசு கலைக்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து 310 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கல்லூரிக்கு வந்தனர். மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் துவங்கி நடைபெறுகிறது. கல்லூரி விடுமுறை விட்டபிறகு 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் கல்லூரி துவங்கியதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Stories:

>